வடக்கு
யாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்

Jan 26, 2025 - 03:32 PM -

0

யாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்

இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினமான இன்று (26) யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய தேசியக் கொடியேற்றி நிகழ்வுகள் இடம்பெற்றன.

 

யாழ்ப்பாணம் மருதடி லேனில் உள்ள யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தில் யாழ்ப்பாணம் இந்திய உதவித் தூதுவர் சாய் முரளி இந்திய தேசிய கொடியை எற்றிவைத்தார்.

 

இதனைத் தொடர்ந்து இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின வாழ்த்து செய்திகள் வாசிக்கப்பட்டது.

 

இதன் போது இந்திய முணைத்தூதரக அதிகாரிகள் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

 

இந்நிகழ்வில் துணைத் தூதுவர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மற்றும் இந்திய மற்றும் இலங்கை மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05