செய்திகள்
வௌிநாட்டவர்கள் இருவர் பயணித்த முச்சக்கரவண்டி விபத்து!

Jan 26, 2025 - 05:13 PM -

0

வௌிநாட்டவர்கள் இருவர் பயணித்த முச்சக்கரவண்டி விபத்து!

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குளானதில், அதில் பயணித்த இரண்டு வெளிநாட்டவர்கள் காயமடைந்து வட்டவளை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


இந்த விபத்தில் இரண்டு ஸ்லோவாக் நாட்டவர்கள் காயமடைந்ததாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த விபத்து இன்று (26) பிற்பகல் 3 மணியளவில் ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை, குயில்வத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.


வாடகைக்கு எடுக்கப்பட்ட முச்சக்கர வண்டியில் பயணித்த இரண்டு வெளிநாட்டவர்களில் ஒருவர் முச்சக்கர வண்டியை செலுத்தியுள்ளார்.


அதிக வேகத்துடன் முச்சக்கரவண்டி செலுத்தியதில், வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


காயமடைந்த இருவரின் நிலை மோசமாக இல்லை என்றாலும், முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05