செய்திகள்
கட்டு துப்பாக்கி வெடித்த சம்பவம் - சந்தேகநபர் கைது

Jan 26, 2025 - 11:20 PM -

0

கட்டு துப்பாக்கி வெடித்த சம்பவம் - சந்தேகநபர் கைது

மீகஹகிவுல - அக்கலாஉல்பத கிராமத்திற்கு மேலே உள்ள அடர்ந்த காட்டில் இன்று (26) சட்டவிரோத மதுபான உற்பத்திச் செய்யும் இடமொன்றை முற்றுகையிடச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர், கட்டு துப்பாக்கிக்கு இலக்காகி காயமடைந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட நபர் அக்கலாஉல்பத, ஹந்துன்வகாவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சந்தேக நபர் நாளை (27) மஹியங்கனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.


இந்த விபத்தில் காயமடைந்த கான்ஸ்டபிள் தற்போது பதுளை போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


சம்பவம் தொடர்பில் கந்தகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05