உலகம்
பெற்றோல் டேங்கர் லொறி வெடித்ததில் 18 பேர் பலி

Jan 27, 2025 - 11:18 AM -

0

பெற்றோல் டேங்கர் லொறி வெடித்ததில் 18 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள இனுகு மாகாணத்தில் நேற்று (26) மாலை பெற்றோல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லொறி சென்றுகொண்டிருந்தது. இனுகு-ஒனிஸ்டா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி முன்னே சென்ற வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கியது.

 

இந்த விபத்தில் டேங்கர் லொறியில் இருந்த பெற்றோல் தீப்பற்றி வெடித்துச் சிதறியது. இந்த கோர விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

 

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். இதில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05