வடக்கு
இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணி விபரங்களை வழங்குங்கள்

Jan 27, 2025 - 04:04 PM -

0

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணி விபரங்களை வழங்குங்கள்

இராணுவம் மற்றும் கடற்படையின் ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களின் காணி விபரங்களை எம்மிடம் ஒப்படைத்தால் அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ. திலகநாதன் தெரிவித்தார்.

 

இவ்விடயம் தொடர்பில் அவர் இன்று (27) மேலும் கருத்து தெரிவிக்கையில்,

 

கடந்த காலத்தில் இராணுவத்தினர் தமது தேவைக்காக வன்னிப் பிரதேசத்தில் கையகப்படுத்திய பிரதேசங்களை படிப்படியாக எமது அரசாங்கம் விடுவித்து வருகின்றது. கடந்த காலங்களிலும் இவ்வாறான காணிகளை எமது அரசாங்கம் விடுவித்து இருந்தது.

 

கடந்த வாரமும் இராணுவம் மற்றும் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் தொடர்பான விபரங்களை சேகரித்து இருந்தது. எனவே அவ்வாறு கையகப்படுத்தப்பட்ட இடங்கள் இருக்குமாக இருந்தால் அது தொடர்பான விபரங்களை எமக்கு தந்து உதவுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்.

 

அவ்வாறான இடங்களை மிக விரைவில் விடுவித்து மக்களுடைய பாவனைக்கு வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க உள்ளோம் எனத் தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05