Jan 27, 2025 - 04:55 PM -
0
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மியான்குளம் காட்டுப் பாதையில் மாடு மேய்க்கச் சென்ற 19 வயது இளைஞன் இன்று (27) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வட்டவான் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஜீவேந்திரன் சினேஜன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--