மலையகம்
Eagle’s View Point திறந்து வைப்பு

Jan 27, 2025 - 06:28 PM -

0

Eagle’s View Point திறந்து வைப்பு

நுவரெலியாவில் உள்ள சாந்திபுர Eagle’s View Point உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.

 

நுவரெலியா மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 6,182 அடி உயரத்தில் அமைந்துள்ள இலங்கையின் மிக உயரமான கிராமமான சாந்திபுர கிராமத்தைச் சுற்றி இந்த கண்காணிப்பு தளம் கட்டப்பட்டுள்ளது.

 

Eagle’s View Point நேற்று (26) வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது.

 

சுற்றுலாத் துறையின் வளர்ச்சியின் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தின் அபிவிருத்திக்காக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக இலங்கையை ஒரு முக்கிய மற்றும் கவர்ச்சிகரமான இடமாக மாற்றும் முதன்மை நோக்கத்துடன் 2024 ஜூலை 31ஆம் திகதியன்று தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள், இலங்கை விமானப்படையின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டது.

 

இதற்கான நிதி பங்களிப்பை சுற்றுலா அபிவருத்தி அதிகாரசபை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05