Jan 28, 2025 - 12:05 PM -
0
சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள பொலிஸ் நாய் பயிற்சி தளத்தில் வெடி பொருட்களை கண்டுபிடிக்கும் பிரிவில் ஒரு நாய்க்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
புசாய் என்ற பெயர் கொண்ட இந்த நாய்க்குட்டி கடந்த 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28ஆம் திகதி பிறந்தது. தனது அழகான சிரிப்பு மற்றும் கண்டறியும் திறமை மூலம் சமூக வலைதளங்களில் வைரலான இந்த நாய்க்குட்டி சீனா பொலிஸ் துறையில் சேர்க்கப்பட்டது.
இதை சாங்கிள் கவுன்டி பொதுபாதுகாப்பு பணியகத்தை சேர்ந்த பயிற்சியாளரான ஜாவோ கிங்ஸ்சுவாய் நன்கொடையாக வழங்கி இருந்தார்.
பிறந்து 4 மாதத்தில் பொலிஸ் பயிற்சி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இந்த நாய்க்குட்டிக்கு அனைத்து வகையான பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. பின்னர் பொலிஸ் துறையில் முழு நேரம் பணியாற்றும் மோப்ப நாய் அந்தஸ்து அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பணியின் போது தூங்கியதற்காக இந்த நாய்க்கு வருடாந்திர ஊக்கத்தொகை இரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் உணவு கிண்ணத்திலேயே சிறுநீர் கழித்த முறைப்பாட்டிலும் இந்த நாய் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதோடு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, அபராதமாக, அந்த நாய்க்கு வழங்கப்படும் தின்பண்டங்கள் அகற்றப்பட்டுள்ளது.