Jan 28, 2025 - 12:56 PM -
0
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது T20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன்ஷா மைதானத்தில் இன்று நடக்கிறது.
முதல் இரு ஆட்டங்களில் கிடைத்த வெற்றி உற்சாகத்துடன் களம் இறங்கும் இந்திய அணி தொடரை வசப்படுத்துவதில் தீவிரம் காட்டும் என எதிர்பார்கக்ப்படுகிறது.
இதேவேளை, முதிலிரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ள இங்கிலாந்து அணி, இந்த போட்டியில் வெற்றிபெறும் கட்டாயத்தில் உள்ளது. எனவே, இங்கிலாந்து அணி இன்றைய போட்டியில் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டியானது இலங்கை நேரப்படி இன்றிரவு 7.00 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.