சினிமா
அதிகம் ட்ரெண்டாகி வரும் 'ச்சீ ச்சீ ச்சின்' பாடல் - அதன் அர்த்தம் என்ன தெரியுமா?

Jan 28, 2025 - 03:00 PM -

0

அதிகம் ட்ரெண்டாகி வரும் 'ச்சீ ச்சீ ச்சின்' பாடல் - அதன் அர்த்தம் என்ன தெரியுமா?

சமூக வலைதளங்களில் மொழி எல்லைகளை தாண்டி பல பாடல்கள் திடீரென ட்ரெண்டாவது வாடிக்கையாக உள்ளது.


அப்படியாக கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் ‘சீ சீ சின்’ என்ற ஒடிய மொழி பாடல் ட்ரெண்டாக இருந்து வருகிறது.


பலரும் ஜாலியாக டான்ஸ் ஆடும் ரீல்ஸ்களுக்கு கூட இந்த பாடல்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் உண்மையில் இந்த பாடல் ஒரு சோக பாடல். 
காதல் தோல்வியில் காதலன் பாடும் இந்த பாடல் பலிபுல் Baliphul என்ற ஆல்பத்தில் இடம் பெற்றுள்ளது.


இந்த பாடலின் அர்த்தத்தை கீழே காணலாம்.


Manake Chihnilu Naai


நீ வசதியை பார்த்து விட்டாய் ஆனால் என்னுடைய உண்மையான மதிப்பை உணரவில்லை


Sunake Chinlu Banaake Chinlu


Manush Chinlu Naai


நீ தங்கத்தையும் நகைகளையும் உணர்ந்து விட்டாய் ஆனால் ஒரு உண்மையான மனிதனை அடையாளம் காணவில்லை


Dhan Naai Boli Mora Paakhe Nani


Taar Kaachhe Uthigalu


உன்னிடம் வசதி இல்லை என்பதால் என்னை இன்னொருத்திக்காக விட்டு விட்டாய்


Dhan Achhe Sina Man Naai Taakhe


Tui Jaani Na Paaralu


நீ அடையாளம் கண்ட அந்த வசதியானவன் ஒருவேளை இதயமற்றவனாக இருக்கலாம்


Gote Din Mishaa Jagidelu Naai


Kede Katha Karidelu


நாம் சேர்ந்து இருந்த நாட்களை நீ பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை


Muu Gaa’n Jaaikiri Aasalaa Bele


Kenta Paasari Delure Nani Chhi Chhi Chhi


நீ என்னிடம் மோசமான வார்த்தைகளை பேசி இருக்கிறாய்


நான் திரும்பி வருவதற்குள் எப்படி இதையெல்லாம் நீ மறந்தாய்


Chhi Chhi Chhi Re Nani Chhi


உன்னை நினைத்து வெட்கப்படுகிறேன் நானி


Chhi Chhi Chhi Re Nani Chhi


உன்னை நினைத்து வெட்கப்படுகிறேன் 

Comments
0

MOST READ
01
02
03
04
05