Jan 29, 2025 - 08:11 AM -
0
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை நேற்று (28) நடைபெற்ற அதன் கூட்டத்தில், நாணயக் கொள்கை நிலைப்பாட்டை தற்போதைய மட்டத்திலேயே பராமரிக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் ஓரிரவு கொள்கை வீதம் (OPR) 8.00 சதவீதமாக மாறாமல் இருக்கும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது..