Header Logo

ஜோதிடம்
2025 இல் நடக்கும் கிரக பெயர்ச்சிகள்

Jan 29, 2025 - 10:35 AM -

0

2025 இல் நடக்கும் கிரக பெயர்ச்சிகள்

இன்று (29) சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார்.

 

மே 14 ஆம் திகதி குரு பகவான் ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கும் மாற உள்ளார்.

 

ராகு - கேது கிரகங்கள் மே 18 ஆம் திகதி பெயர்ச்சி ஆகின்றனர். இதில் ராகு மீனத்திலிருந்து கும்ப ராசிக்கும், கேது கன்னியிலிருந்து சிம்ம ராசிக்கும் மாற உள்ளனர்.

 

மார்ச் 29 ஆம் திகதி முதல் மே 18 ஆம் திகதி வரை சனி மற்றும் ராகு சேர்ந்து சஞ்சரிக்க உள்ளனர். இதனால் உருவாகக்கூடிய அசுப யோகத்தால் கடகம், கும்பம் உள்ளிட்ட 5 ராசிகளுக்கு பெரியளவில் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

 

பிசாச யோகம்,

 

ஜோதிடத்தில் சனி, ராகு - கேது அசுப கிரகங்களாகக் கருதப்படுகின்றன. சோம்பேறித்தனம், மோசமான சிந்தனை தரக்கூடிய சனி பகவான், பேராசை, மனக் குழப்பத்தைத் தரக்கூடிய ராகுவுடன் சேர உள்ளார். இதனால் உருவாகக்கூடிய பிசாச யோகத்தால் மனிதர்களிடையே பிரச்னை ஏற்படுவது மட்டுமல்லாமல், இயற்கை சூழல் பாதிக்கவும், நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

பொருளாதார நிலை பாதிப்பு நாட்டுக்கும், வீட்டுக்கும் ஏற்படலாம். இதனால் மக்கள் பலவித சிரமத்திற்கு ஆளாக நேரிடும். சனி - ராகுவின் அசுப சேர்க்கை நடக்கக்கூடிய காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் யார் என இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

 

கடகம்

 

கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு கொஞ்சம் கடினமான காலமாக அமையப் போகிறது. உங்களின் பிரச்னைகள் அதிகரிக்கும். உங்கள் வேலையில் கவனம் தேவை. குறிப்பாக வேலை தொடர்பான பயணங்கள் அலைச்சலையும், உடல் நலப் பிரச்னைகளை தரக்கூடியதாக இருக்கும். தனியர் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு பணிச்சுமையும், உங்கள் வேலையில் கவனமும் செலுத்துவது நல்லது. ஜூன் 17 வரை எந்த வித முதலீடுகளையும் தவிர்ப்பது நல்லது. உடல் நலனில் கவனம் செலுத்தவும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.

 

கன்னி

 

கன்னி ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் சனி - ராகுவின் சேர்க்கை நடக்க உள்ளது. இதனால் இந்த நேரம் கடினமானதாக இருக்கும். இந்த காலத்தில் எந்த ஒரு முடிவையும் நிதானமாக சிந்தித்து எடுக்கவும். இல்லையெனில் தேவையற்ற நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளது.

 

எந்த வேலையிலும் கடின உழைப்புக்குப் பின்னரே எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வீட்டு செலவுகளை சமாளிக்க சிரமங்கள் ஏற்படும். கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். நிதி நிலை தொய்வடையும். புத்திசாலித்தனமாக பணத்தை கையாள்வதோடு, செலவுகளைத் தவிர்க்கவும்.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசிக்கு ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். குறிப்பாக ரத்தம் தொடர்பாக நோய்கள் சதிக்க வாய்ப்புள்ளது. அரசு அதிகாரிகளிடம் பிரச்னை ஏற்படலாம். தவறான வழிகளில் சம்பாதித்த பணத்தை வட்டியுடன் திருப்பி தர வேண்டியது இருக்கும். அதனால் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட வேண்டாம்.

 

காதல் உறவில் எச்சரிக்கையுடன் செயல்படுவதோடு, விட்டுக் கொடுத்துச் செல்லவும். இல்லையெனில் உறவு முறிவு ஏற்படலாம். வண்டி, வாகன பயன்பாட்டில் கவனமாக இருக்கவும். சிலருக்கு விபத்து அபாயம் உள்ளது. உடல் நலனில் எச்சரிக்கையுடன் இருக்கவும். எந்த வித சச்சரவுகளிலிருந்து விலகி இருக்கவும்.

 

கும்பம்

 

கும்ப ராசிக்கு ஏற்கனவே ஏழரை சனி நடந்து கொண்டிருக்கக்கூடிய சூழலில், இந்த சனி -ராகு சேர்க்கை காலகட்டம் மிகவும் சவாலானதாக அமையும். உங்கள் மனதில் குழப்பமும், ஈகோ உணர்வும் அதிகமாக இருக்கும். இதனால் பிறரிடம் பழகுவதில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் இணக்கமில்லாத நிலை இருக்கும். குடும்பத்தின் அமைதி கெடும். உங்கள் பேச்சு, செயலில் கட்டுப்பாடு அவசியம். உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்.

 

மீனம்

 

மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடுமையான ஜென்ம சனி தொடங்குவதோடு, உங்கள் ராசியில் ராகுவுடன் சனி இணைய உள்ளார். இதனால் உடல் நல பிரச்னைகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. உங்களின் கால்கள், முழங்கால் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் நலம் தொடர்பாக பிரச்னைகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. உங்களின் நிதி நிலை பாதிக்கப்படலாம்.

தொழில், வியாபாரம் செய்யக்கூடியவர்கள் புதிய ஒப்பந்தங்கள் செய்வதில் கூடுதல் கவனம் தேவை.

 

புதிய தொழில் தொடங்குவதைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் திட்டமிட்ட வேலைகள் தடைப்படலாம். உடல்நலனில் கவனமும், உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துவதும் அவசியம். சனிக்கிழமைகளில் கடுகு எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபாடு செய்யவும்.    


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title