செய்திகள்
லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமா?

Jan 30, 2025 - 11:06 AM -

0

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமா?

உலக சந்தையில் எரிவாயு விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்த போதிலும், பெப்ரவரி மாதத்தில் நுகர்வோருக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

லாஃப்ஸ் குழும தலைமை நிர்வாக அதிகாரி நிரோஷன் ஜே. பீரிஸ் கருத்து வௌியிடுகையில், இந்த தீர்மானம் ஏனைய உயர்மட்ட நிர்வாக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தீர்மானிக்கப்படும் என்றார்.


"உலக சந்தையில் எரிவாயு விலைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அவ்வாறு வௌியிட்டதன் பின்னர் உயர் மட்ட நிர்வாகத்துடன் இணைந்து, நாங்கள் நிச்சயமாக நுகர்வோருக்கான நிவாரண விலையை வழங்குவோம். ஜனவரி மாதத்தில் உலக சந்தையில் எரிவாயு விலைகள் அப்படியே இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். ஒருவேளை அடுத்த சில நாட்களில் அது மாறக்கூடும். எனவே, பெப்ரவரி மாதத்திற்கான எரிவாயு விலைகளைப் பற்றி இப்போது சொல்வது கடினம்."

Comments
0

MOST READ
01
02
03
04
05