செய்திகள்
வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கொடுப்பனவு

Jan 30, 2025 - 11:24 AM -

0

வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கொடுப்பனவு

கடந்தாண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கும் பணி இன்று (30) முதல் ஆரம்பிக்கப்படும் என்று விவசாய மற்றும் விவசாய காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது.


பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இழப்பீடு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக அதன் தலைவர் பேமசிறி ஜசிங்கராச்சி தெரிவித்தார்.


பயிர் சேதம் அடைந்த விவசாயிகளின் கணக்குகளில் தொடர்புடைய நிதியை வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இதனடிப்பயைில், 13,379 ஏக்கருக்கு இன்று (30) இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளது. மேலும், இன்றைய இழப்பீட்டுத் தொகை நெல் விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05