மலையகம்
மாணவர்களின் புதுமுக வரவேற்பு விழா

Jan 30, 2025 - 03:57 PM -

0

மாணவர்களின் புதுமுக வரவேற்பு விழா

நானுஓயா நாவலர் ஆரம்ப கல்லூரியில் 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (30) இடம்பெற்றது.

 

இதன் முதல் நிகழ்வாக கல்லூரின் நுழைவாசலில் இருந்து புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் பூ மற்றும் வண்ண பலூன்களை வழங்கி உற்சாகமாக வரவேற்றனர்.

 

அதனை தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஆலயத்தில் விநாயகர் பூஜை நடைபெற்று கல்லூரியில் பிரதான மண்டபத்திற்கு அழைத்துச் சென்று ஆரம்ப நிகழ்வாக குத்து விளக்கேற்றினர்.

முதலாம் ஆண்டு மாணவர்களை மகிழ்விக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 

தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்கள்  அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கி  மகிழ்ச்சியுடன் வரவேற்பு விழா நிறைவு பெற்றது.

--

Comments
0

MOST READ