விளையாட்டு
மைதானத்தில் திரண்ட் ரசிகர்கள்

Jan 30, 2025 - 04:32 PM -

0

மைதானத்தில் திரண்ட் ரசிகர்கள்

விராட் கோலி 12 ஆண்டுக்குப் பிறகு ரஞ்சி டிராபி தொடரில் விளையாடுகிறார். டெல்லி மற்றும் ரெயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார்.

 

இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி பங்கேற்கும் போட்டி என்பதால் டெல்லி - ரெயில்வேஸ் அணிகள் மோதும் போட்டி நேரலையில் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் போட்டி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று ஆரம்பமாகியது.

 

இந்நிலையில், டெல்லி அணிக்காக விளையாடும் விராட் கோலியைக் காண காலையில் இருந்தே ரசிகர்கள் திரண்டனர்.

 

ரசிகர் ஒருவர் பாதுகாப்பையும் மீறி மைதானத்தினுள் சென்று விராட் கோலியின் காலில் விழுந்தார். உடனே பதறிய கோலி அவரை தூக்கி விட்டார். அங்கு வந்த பாதுகாவலர்கள் அவரை மைதானத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.

 

விராட் கோலி பயிற்சி செய்யும்போதே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அருண் ஜெட்லி மைதானத்தில் கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05