Jan 30, 2025 - 05:36 PM -
0
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் 300 கோடி ரூபாவுக்கு அதிகமாக வசூலித்தது. இதனை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24ஆவது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
இதனையடுத்து, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25ஆவது படத்தில் நடிக்கிறார் என்று படக்குழு கடந்த மாதம் அதிகாரப்பூரவமாக அறிவித்தது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இந்த படத்தில் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக ஸ்ரீ லீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 25ஆவது படமாகவும், ஜி.வி.பிரகாஷ்க்கு 100ஆவது படமாகவும் இப்படம் அமைகிறது. சுமார் 150 கோடி ரூபா பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறது.
இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது.
இப்படத்திற்கு பராசக்தி என்று பெயரிட்டுள்ளனர். படத்தின் டைட்டில் டீசர் வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் படக்குழு மீண்டும் சர்ப்ரைஸை கொடுத்துள்ளனர். தற்பொழுது படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் தமிழ் தீ பரவட்டும் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இப்படம் இந்தி எதிர்ப்பை பேசும் திரைப்படமாக உருவாகி வருகிறது.