Jan 30, 2025 - 06:29 PM -
0
பாகிஸ்தான் நாட்டின் இராணுவ மேஜர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தின் உள்ள ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு படவினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் பாகிஸ்தான் இராணுவத்தின் மேஜர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதேபோல் இன்னொரு சிப்பாயும் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் நடவடிக்கையில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு தலைமை ஏற்ற மேஜர் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் எல்லையில் மேலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருவதாகவும் அந்த பகுதி முழுவதும் பாகிஸ்தான் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பலியான மேஜர் உள்பட இருவரின் மரணத்திற்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி மரியாதை செலுத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளன.