Jan 31, 2025 - 06:52 AM -
0
பாகிஸ்தானில் டிக் டொக் செயலியில் வீடியோவை பதிவிட்டதற்காக 15 வயது சிறுமியை அவரது தந்தை சுட்டுக் கொலை செய்துள்ளார்.
சுட்டு கொல்லப்பட்ட சிறுமி பாகிஸ்தானில் உள் குவெட்டா நகரை சேர்ந்தவராவார்.
அமெரிக்காவில் படித்து வந்த சிறுமி கடந்த 15ஆம் திகதி குவெட்டாவுக்கு வந்தார். சிறுமி டிக்டொக்கில் வீடியோ போடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அது அவரது தந்தைக்கு அது பிடிக்கவில்லை.
டிக் டொக் செயலியில் வீடியோ பதிவிடக்கூடாது என்று அவர் மகளை எச்சரித்துள்ளார். இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமையன்று அந்த சிறுமி டிக் டொக்கில் வீடியோ பதிவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த தந்தையும் உறவினர் ஒருவரும் சேர்ந்து சிறுமியை சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக சிறுமியின் தந்தையும், உறவினரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.