செய்திகள்
ஆற்றுக்குள் வீழ்ந்து வயோதிபர் மரணம்

Jan 31, 2025 - 07:11 AM -

0

ஆற்றுக்குள் வீழ்ந்து வயோதிபர் மரணம்

பண்டாரகம - குங்கமுவ பிரதேசத்தில் ஆற்றில் வீழ்ந்த நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.


பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்க அமைவாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே மேற்படி விடயம் தெரியவந்துள்ளது.


உயிரிழந்த நபர் 88 வயதுடைய பண்டாரகம, குங்கமுவ பகுதியில் வசித்து வந்தவராவார்.


குறித்த நபர் மிக வயதானவர் எனவும், நடப்பதற்கு கூட மிகவும் சிரமப்பட்டு இருந்தவர் எனவும் வயலுக்கு சென்றுக்கொண்டிருந்த போதே இவ்வாறு ஆற்றுக்குள் வீழ்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05