வடக்கு
சேனாதிராஜாவின் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்

Jan 31, 2025 - 09:56 AM -

0

சேனாதிராஜாவின் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான மாவை சேனாதிராஜாவின் மறைவையொட்டி வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விடுத்த இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.

 

அவர் தனது இரங்கல் செய்தியில் மேலும் தெரிவித்தாவது,

 

தமிழ் மக்களை நீண்டகாலம் பிரதிநிதித்துவப்படுத்திய மூத்த அரசியல்வாதியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான மாவை சேனாதிராஜாவின் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.

 

அவர் தனது வாழ்நாளை தமிழ் மக்களின் அரசியல் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக அர்ப்பணித்து, அவர்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளுக்கு அயராது உழைத்தவர்.

 

அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தமிழ் மக்களுக்கான தியாகம் என்பன அரசியல் நிலப்பரப்பில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளன.

 

யாழ். மாவட்டச் செயலராக நான் முன்னர் பணியாற்றிய காலத்தில், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவராக இருந்த அவர், தமிழ் சமூகத்துக்காக ஆற்றிய பணிகள் அளப்பரியன. வலி. வடக்கின் மீள்குடியமர்வு மற்றும் அந்தப் பிரதேசத்தின் உயர்வுக்காக அவர் செய்த சேவைகளை அருகிலிருந்து பார்த்திருக்கின்றேன்.

 

காலம் முழுவதையும் இந்த மக்களுக்காகவே செலவிட்ட ஒருவரை இன்று இழந்து நிற்கின்றோம். வடக்கு மாகாண மக்கள் சார்பாக, அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05