வடக்கு
போதைப்பொருள் மாத்திரைகளுடன் ஐவர் கைது

Jan 31, 2025 - 10:21 AM -

0

போதைப்பொருள்  மாத்திரைகளுடன் ஐவர் கைது

கிளிநொச்சி - முழங்காவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முழங்காவில் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாண போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைவாக கடந்த 29 ஆம் திகதி வீட்டினை சுற்றி வளைத்த போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் 5 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 40,000 போதைப் பொருள் மாத்திரைகளை கைப்பற்றியதுடன் 5 சந்தேக நபர்களையும் கைது செய்து முழங்காவில் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

 

இச்சம்பவம் தொடர்பாக முழங்காவில் பொலிஸார் சந்தேக நபர் ஐவரையும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் முற்படுத்திய பொழுது எதிர்வரும் 06.01.2025 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், வட்டக் ஒருவரும் தலைமன்னார் ஒருவரும் முழங்காவில் பகுதியைச் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05