Jan 31, 2025 - 01:57 PM -
0
கார் ரேஸில் அஜித் வெற்றிபெற்ற பின் தொலைப்பேசி ஊடாக முதல் வாழ்த்து தெரிவித்தவர் நடிகர் விஜய்தான் என சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
டுபாயில் நடைபெற்ற கார் பந்தையத்தில் நடிகர் அஜித் குமார் மற்றும் அவரது ரேஸிங் குழு மூன்றாவது இடத்தை பிடித்தது.
இதனைத் தொடர்ந்து இந்திய அரசு சார்பாக அஜித்திற்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப் பட்டது. ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் நடிகர் விஜய் சார்பாக அஜித்திற்கு வாழ்த்து தெரிவிக்கப்படவில்லை என்பது கேள்வியாக இருந்தது. அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் உட்பட பல்வேறு சமூக நிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்றி வருகிறார் விஜய். ஆனால் அஜித் விஷயத்தில் மட்டும் அவர் மெளனமாக இருப்பது ஏன் என சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பப் பட்டது.
இது குறித்து அஜித்தின் மேலாளர் தற்போது உண்மையை தெரிவித்துள்ளார். கார் பந்தையத்தில் வெற்றிபெற்றபோதும் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்ட போதும் அஜித்திற்கு ஃபோன் செய்து முதலில் வாழ்த்து தெரிவித்தது விஜய்தான் என சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.