Header Logo

கிழக்கு
மாவைக்கு மட்டக்களப்பில் அஞ்சலி

Feb 2, 2025 - 09:39 AM -

0

மாவைக்கு மட்டக்களப்பில் அஞ்சலி

மாவை சேனாதிராஜா அவர்கள் மறைந்தாலும் அவர் சென்ற இலட்சியப்பாதையில் தாமும் செல்வதற்கு தயாராகவுள்ளதாகவும் சலுகைக்காவும் இலாபத்திற்காகவும் உணர்வினை விற்பதற்கோ,ஒட்டுமொத்த தமிழ் தேசிய அரசியலிலிருந்து விலகவோ விரும்பவில்லையென இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழு பேச்சாளரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

அமரத்துவமடைந்த இலங்கை தமிழரசுக் கட்சி மூத்த தலைவர் அமரர் மாவை சேனாதிராஜா ஆத்ம சாந்தி வேண்டி சித்தாண்டி இலங்கைத் தமிழரசு கட்சியின் வட்டார கிளை ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு நேற்று (01) மாலை சித்தாண்டியில் நடைபெற்றது.

மட்டக்களப்பு சித்தாண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழு பேச்சாளரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து சிறிநேசன், மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னனி தலைவர் கே.சோபனன் சித்தாண்டி இலங்கைத் தமிழரசு கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

அமரர் மாவை சேனாதிராஜா அவர்களின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு, ஆத்ம வேண்டிஇரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

--

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title