Feb 2, 2025 - 11:54 AM -
0
துடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பற்ற துடுப்பாட்டமே காலி டெஸ்ட் போட்டியின் படுதோல்விக்கான காரணம் என இலங்கை கிரிக்கட் அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்று (01) போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
"இந்த மைதானம் அவ்வளவு கடினமானது அல்ல. வீரர்கள் Under pressure எடுத்துக்கொள்வது எவ்வாறு என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையாக விளையாடுவது பற்றி தெரிந்திருக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் ஒரு தனித்துவமான விளையாட்டு. இங்குதான் ஒவ்வொரு வகையான சூழ்நிலை வருகிறது. அந்த சூழ்நிலையை நாம் கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் பந்து வீச்சுத் திறனை மேம்படுத்த வேண்டும். எங்களிடம் நல்ல துடுப்பாட்ட வரிசை உள்ளது. எனவே நாங்கள் நன்றாக துடுப்பெடுத்தாடவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். எனவே துடுப்பாட்ட வீரர்கள் எவ்வாறு சதங்கள் பெறுவது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். எனவே, அடுத்த டெஸ்ட் போட்டியானது ஒரு நல்ல போட்டியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்."