Feb 2, 2025 - 11:48 PM -
0
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான T20 போட்டியில் இந்திய அணி 150 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
வான்கடே மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டயில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்திய அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அபிஷேக் சர்மா 54 பந்துகளில் 135 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து 248 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 10.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 97 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இந்த வெற்றியின் ஊடாக 5 போட்டிகள் கொண்ட T20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.