செய்திகள்
10 இலட்சம் பெறுமதியான வலம்புரி சங்குகள் சிக்கின

Feb 3, 2025 - 06:33 PM -

0

 10 இலட்சம் பெறுமதியான வலம்புரி சங்குகள் சிக்கின

10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகளவான பெறுமதி கொண்ட 10 வலம்புரி சங்குகளை தனது காரில் மறைத்து வைத்து விற்பனை செய்வதற்கு எடுத்துச் சென்ற நபரொருவரை கணேமுல்ல பொலிஸார் இன்று (03) கைது செய்துள்ளனர்.

 

ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அடையாளம் தெரியாத ஒருவர் இந்த வலம்புரிகளை தனக்கு எடுத்துச் சென்று விற்கச் சொன்னதாகவும், அந்தக் கோரிக்கையின் பேரில் அவற்றை விற்க கொண்டு சென்றதாகவும் சந்தேகநபர், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

 

சந்தேகநபர் பயணித்த காரும் பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் நாளை (04) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05