செய்திகள்
பியூமி, விரஞ்சித் மீதான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை வழங்க உத்தரவு

Feb 3, 2025 - 08:00 PM -

0

பியூமி, விரஞ்சித்  மீதான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை வழங்க உத்தரவு

மொடல் அழகியான பியூமி ஹன்சமாலி மற்றும் ஹவுரா லங்கா தலைவர் விரஞ்சித் தாம்புகல ஆகியோருக்கு எதிரான வரி விலக்கு தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கையை பெற்றுத் தருமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

அதன்படி, ஜூலை 31 ஆம் திகதி குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் தரங்க மஹவத்த இன்று (03) உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.

 

உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் பிரிவு 190 இன் படி, குறித்த இரண்டு நபர்களும் வரிச் சட்டத்தின் கீழ் குற்றங்களைச் செய்துள்ளார்களா என்பதை விசாரிக்க உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ​​நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

 

இந்த சம்பவம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக இருவரின் வீடுகளையும் சோதனை செய்ய நீதிமன்ற உத்தரவு பெறப்பட்ட போதும், அவ்வாறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டபோது இருவரும் வீடுகளில் இல்லை என சம்பவம் தொடர்பில் சமர்ப்பணங்களை முன்வைத்த, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தினேஷ் பெரேரா,  கடந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05