செய்திகள்
மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லம் குறித்து திலித்தின் நிலைப்பாடு

Feb 3, 2025 - 10:42 PM -

0

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லம் குறித்து திலித்தின் நிலைப்பாடு

ஜே.வி.பியின் யுத்த வெற்றிக்கு எதிரான முழக்கத்திற்கு இணங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து அகற்ற தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றால், சர்வஜன அதிகாரம் அதற்கு எதிரானது என்று அதன் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும், தொழில்முனைவோருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இன்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே திலித் ஜயவீர இதனை தெரிவித்தார்.

 

இந்த சந்தர்ப்பத்தில்,  தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவரான தொழிலதிபர் ருஷான் மலிந்தவும், அந்தக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் சர்வஜன அதிகாரத்தில் இணைந்தனர்.

 

அதன்படி, சர்வஜன அதிகாரத்தின் துணைச் செயலாளர் பதவியும், திகாமடுல்ல மாவட்ட தலைவர் பதவியும் தொழிலதிபர் ருஷான் மலிந்தவுக்கு வழங்கப்பட்டது.

 

மேலும் மாத்தளை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான அமைப்பாளர்களும் இதன்போது நியமிக்கப்பட்டனர்.

 

இதன்போது, தொழில்முனைவோர் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மேலும் கருத்து தெரிவிக்கையில்...

 

வீடியோ கீழே....

Comments
0

MOST READ
01
02
03
04
05