செய்திகள்
ஸ்ரீ தர்மகீர்த்தியாராம மகா விகாரையில் சுதந்திர தின வைபவம்

Feb 4, 2025 - 01:45 PM -

0

ஸ்ரீ தர்மகீர்த்தியாராம மகா விகாரையில் சுதந்திர தின வைபவம்

77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கொள்ளுப்பிட்டிய ஸ்ரீ தர்மகீர்த்தியாராம மகா விகாரையில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்விலும், மத வழிபாடுகளிலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (04) காலை பங்கேற்றார்.

 

1948 பெப்ரவரி 4 ஆம் திகதி அன்று நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, அப்போதைய பிரதமர் டி.எஸ் சேனநாயக்கா இந்த விகாரைக்கு விஜயம் செய்து, அப்போதைய விகாராதிபதி சங்கைக்குரிய ஹஞ்சாபொல விமலவன்ச அனுநாயக்க தேரரின் ஆசிர்வாதத்திற்கு மத்தியில் மாமர கன்றை நட்டினார்.

 

இதனை நினைவுகூரும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று காலை இந்த விகாரையில் சுதந்திர தின நிகழ்வு கொண்டாடப்படுகிறது. அவ்வாறே விகாரையில் அமைந்து காணப்படும் டி.எஸ் சேனாநாயக்கவின் திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டு வருகின்றது.

 

இன்றைய இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05