கிழக்கு
26 வயது இளைஞன் கேரளா கஞ்சாவுடன் கைது!

Feb 4, 2025 - 01:54 PM -

0

26 வயது இளைஞன் கேரளா கஞ்சாவுடன் கைது!

கேரளா கஞ்சாவினை வைத்திருந்த இளைஞனை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

இச்சம்பவம் நேற்று (03) இரவு அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலியார் வீதி பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர் 26 வயது மதிக்கத்தக்க சந்தேக நபராவார்.

 

மேற்படி பகுதியில் அண்மைக்காலமாக கேரளா கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

மேலும் சந்தேக நபரிடம் இருந்து 1 மில்லி கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் மற்றும் சான்றுப் பொருட்கள் யாவும் இன்று (04) கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த கல்முனை தலைமையக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05