Feb 4, 2025 - 02:18 PM -
0
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மின்னணு சிகரெட்டுகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக 262 மின்னணு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வௌியே எடுத்துச் சென்ற போது, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பெண் கொழும்பு தெமட்டகொட பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய வர்த்தகர் என்றும், சிகரெட் கையிருப்பின் மதிப்பு மூன்று மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் எனவும் பணியக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 7 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.