வடக்கு
பொது மன்னிப்பின் கீழ் 17 கைதிகள் விடுதலை

Feb 4, 2025 - 05:51 PM -

0

பொது மன்னிப்பின் கீழ் 17 கைதிகள் விடுதலை

சுதந்திர தினமான இன்று (04) யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.இந்திரகுமார் தலைமையில் கைதிகள் விடுவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

 

இவர்களில் பெண் ஒருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.

 

77 ஆவது சுதந்திர தினமான இன்று  ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05