செய்திகள்
ஜப்பான் கடன் ஒப்பந்தங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

Feb 5, 2025 - 12:59 PM -

0

ஜப்பான் கடன் ஒப்பந்தங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

ஜப்பான் அரசுடன் பரிமாற்றுப் பத்திரம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை நிறுவகத்துடனான திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

 

இலங்கை அரசால் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் கடன் மீள்கட்டமைப்புக் கலந்துரையாடல்களைப் பூர்த்தி செய்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்ட பின்னர், ஜப்பான் அரசுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கமைய, ஜப்பான் அரசுடன் கடன் மீள்கட்டமைப்பு செயன்முறையைப் பூர்த்தி செய்வதற்கான பரிமாற்றுப் பத்திரம் மற்றும் திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்பட வேண்டியுள்ளது. 

 

கையொப்பமிடப்பட வேண்டிய குறித்த ஆவணங்களுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. 

 

அதற்கமைய, ஜப்பான் அரசுடன் பரிமாற்றுப் பத்திரம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை நிறுவகத்துடனான திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக  ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05