Feb 6, 2025 - 05:27 PM -
0
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.
போட்டியல் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடிப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி இன்றைய முதல்நாள் ஆட்டநேர நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 229 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பாக தினேஸ் சந்திமால் 74 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் மிச்சல் ஸ்டார்க் மற்றும் நெதன் லியோன் ஆகியோர் தலா 3 விக்கட்டுக்கள் வீதம் கைப்பற்றியுள்ளனர்.
நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.