வடக்கு
திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்

Feb 6, 2025 - 11:37 PM -

0

திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்

வவுனியாவில் ஏ9 வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


நேற்றிரவு (06) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


வவுனியா நகரில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று வவுனியா மகா வித்தியாலயத்தை அண்மித்து நிறுத்திவிட்டு, மீண்டும் புறப்பட தயாரான போது திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.


தீயை கட்டுப்படுத்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் வீதியில் பயணித்தவர்கள் முயன்ற போதிலும் மோட்டார் சைக்கிள் பகுதியளவில் எரிந்து சேதமடைந்தது. எனினும் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05