Header Logo

கிழக்கு
முத்திரை குத்தாத, அனுமதியற்ற தராசுக்களை பாவித்துவந்த 14 பேருக்கு எதிராக வழக்கு!

Feb 7, 2025 - 10:20 AM -

0

முத்திரை குத்தாத, அனுமதியற்ற தராசுக்களை பாவித்துவந்த 14 பேருக்கு எதிராக வழக்கு!

மட்டக்களப்பு வெல்லாவெளி, வவுணதீவு, பட்டிப்பளை பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள கடைகளை அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்கள அதிகாரிகள் இரு தினங்கள் முற்றுகை யிட்டு முத்துரை குத்தப்படாது மற்றும் அனுமதியற்ற 43 தராசுக்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 14 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜே.ஜே. முரளிதரன் தெரிவித்துள்ளார். 

மாவட்ட விவசாயிகள் தொடர்ச்சியாக செய்த முறைப்பாட்டுக்கமைய மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்கள பணிப்பாளர் விநாயகமூர்த்தி விக்கினேஸ்வரன் தலைமையிலான உத்தியோகத்தர்கள் வெல்லாவெளி, வவுணதீவு பட்டிப்பளை பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள கடைகள் மற்றும் வயல் பகுதிகளில் நெல் கொள்வனவு செய்யும் இடங்கள் உள்ளிட்ட 110 இடங்களை கடந்த இரு தினங்களாக முற்றுகையிட்டனர். 

இதன்போது அங்கு அனுமதியற்ற மற்றும் முத்திரையிடாத 43 தராசுக்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்ததுடன் 14 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதில் இடைத்தரகர்கள் வந்துதான் இந்த சட்டவிரோத தராசுகளை பாவித்து நெல்லை அநியாய விலைகளுக்கு கொள்வனவு செய்கின்றனர். 

எனவே, இவ்வாறான இடைத்தரகர்களை தடை செய்வதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title