Feb 8, 2025 - 07:28 AM -
0
டுபாயில் கைது செய்யப்பட்ட பின்னர் இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ரொடும்ப உபாலி என்ற சந்தேக நபர் தொடர்பில் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் மாத்தறை நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பெறப்பட்டுள்ளது.
39 வயதான ரொடும்ப உபாலி என்ற சந்தேக நபர் மாத்தறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்து வரப்பட்ட பின்னர் இவ்வாறு தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டது.
அதன்படி, சந்தேக நபரை 7 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் திஹகொட பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.