Feb 8, 2025 - 10:58 AM -
0
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசில். இந்நாட்டின் சாவ் பாலோ என்ற நகரில் இருந்து நேற்று (07) சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் விமானி, விமான உரிமையாளர் என 2 பேர் பயணம் செய்தனர்.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, திடீரென வீதியில் மோதியது.
இந்த விபத்தில் 2 பேர் பலியாகியதோடு மேலும், பலர் காயமடைந்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.