Feb 8, 2025 - 01:42 PM -
0
பூமியில் மாசு ஆக்கப்பட்டால் இரத்த ஆறு ஓடும் என்பதற்கு சான்றாய் மாறி உள்ளது அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரம்.
ஆம் நகருக்கு நடுவே ஓடும் சலாடோ நதியின் ஒரு பக்கம் முழுவதும் பசுமையான சூழுலுக்கு நடுவே குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. மற்றொரு பக்கத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அதிகாலையில் கடுமையான துர்நாற்றம் வீசியதால் திடீரென தூக்கத்தில் இருந்து விழித்ததாக கூறும் மக்கள், சலாடோ நதியை பார்த்து அதிர்ந்து போனதாக தெரிவித்துள்ளனர்.
காரணம் தொழிற்சாலை கழிவுகளை எரிக்கும் இடத்தில் இருந்து வெளியான மோசமான புகை மற்றும் சாம்பலால் அந்த பகுதியே மாசு அடைந்து காணப்பட்ட நிலையில், இரத்த நிறத்தில் சலாடோ நதியின் நிறமும் மாறி போயிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.