Feb 8, 2025 - 04:26 PM -
0
பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு நிர்வாகத்தில் சில குழப்பங்கள் இருப்பதால் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
நிர்வாகிகள் இடையே மோதல்கள், மோசமான நிர்வாக நடைமுறை உள்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்படி சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பு உத்தரவிட்டது. இதை கண்காணிக்க சிறப்பு குழு ஒன்றையும் அமைத்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்த சிறப்பு குழு பல முறை எச்சரிக்கை விடுத்தபோதும் பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு நடைமுறைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது என பிபா அறிவித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 8 ஆண்டுக்குள் பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு 3 ஆவது முறையாக தடை செய்யப்பட்டுள்ளது.
பிபா கூறியபடி நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின் இந்தத் தடை விலக்கிக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.