Feb 8, 2025 - 05:40 PM -
0
யாரும் எதிர்பாராத வகையில் இந்திய டெஸ்ட் அணியின் அணி தலைவராக விராட் கோலியை மீண்டும் நியமிக்க பேச்சு நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடுத்து 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
அந்த தொடரின் முடிவில் இந்திய அணியில் மிகப்பெரிய அளவில் மாற்றம் நடைபெற உள்ளது. ரோஹித் சர்மாவின் அணி தலைவர் பதவி நீக்கப்பட்டு மூன்று விதமான அணிகளுக்கும் புதிய தலைவர்களை நியமிப்பது குறித்து பிசிசிஐ விவாதித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று (07) வெளியான தகவலின்படி ஹர்திக் பாண்டியாவை ஒரு நாள் அணி மற்றும் டி20 அணியின் தலைவராக நியமிப்பது பற்றி பேச்சு நடந்து இருக்கிறது. ஆனால், தற்போது மேலும் அதிக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி சூர்யகுமார் யாதவின் துடுப்பாட்டம் நன்றாக இருக்கும் பட்சத்தில் அவரே டி20 அணியின் தலைவராக இருப்பார்.
ஒருநாள் அணியின் தலைவராக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவார். டெஸ்ட் அணியின் தலைவராக மீண்டும் விராட் கோலியை நியமிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
விராட் கோலி தலைவர் ஆக இருந்தவரை இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. விராட் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி உலக அளவில் நம்பர் 1 டெஸ்ட் அணியாக வலம் வந்தது. அதனால் அவரை மீண்டும் கேப்டனாக நியமிப்பது குறித்து பிசிசிஐ அதிகாரிகள் மட்டத்தில் விவாதம் நடந்து வருகிறது.