செய்திகள்
நீர் கட்டண திருத்தம் தொடர்பில் வௌியான அறிவிப்பு

Feb 8, 2025 - 07:59 PM -

0

நீர் கட்டண திருத்தம் தொடர்பில் வௌியான அறிவிப்பு

மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கு ஏற்ப, நீர் கட்டணத் திருத்தம் இந்த மாத இறுதியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

நீர் கட்டணத்தைக் குறைப்பதற்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு தனக்குக் கிடைத்ததாக அதன் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

 

இது தொடர்பான முன்மொழிவு, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு கட்டண திருத்தம் குறித்த முடிவை அறிவிக்க முடியும் என்று ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

 

இந்த முறை நீர் கட்டணத்தை  10 முதல் 30 சதவீதிற்கு இடையில் குறைக்க முடியும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05