செய்திகள்
திசைகாட்டிக்கு வாக்களித்த பெரும்பாலானோர் விரக்தியில்

Feb 8, 2025 - 09:18 PM -

0

திசைகாட்டிக்கு வாக்களித்த பெரும்பாலானோர் விரக்தியில்

திசைகாட்டி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர வாக்களித்தவர்களில் பெரும்பாலானோர் தற்போது அரசாங்கத்தின் மீது விரக்தியடைந்துள்ளதாக  சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

 

பொலன்னறுவையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, அந்தக் குழுக்களை தமது கட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

 

சர்வஜன அதிகாரத்தின் பொலன்னறுவை மாவட்ட செயற்பாட்டாளர்களுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (07) பிற்பகல் நடைபெற்றது.

 

இதன்போது பொலன்னறுவை மாவட்டத்தின் 07 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நியமிக்கப்பட்ட புதிய அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களையும் கட்சித் தலைவர் திலித் ஜயவீர வழங்கினார்.

 

சர்வஜன அதிகாரத்தின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர இதன்போது உரையாற்றுகையில்,

 

"தற்போதைய அரசாங்கம் எப்போதும் வெற்றி பெறும் என்று ஒரு கணம் கூட நினைக்காதீர்கள், அதுதான் போக்கு, அதுதான் நடந்துள்ளது, திசைகாட்டிக்கு வாக்களித்தவர்கள், அதுதான் சவால்."

 

அந்த சவாலை சமாளிக்க திசைக்காட்டிக்கு வாக்களித்தவர்களுக்கு சரியான விடயங்களை விளக்கினால், அவர்கள் எங்களுடன் நிற்பார்கள்.

 

ஏன் என்றால் எங்களுடன் இருந்தவர்கள் தான் அவர்கள் அனைவரும்.

இதை நான் மிகவும் பொறுப்புடன் கூறுகிறேன். இந்த முறை திசைகாட்டிக்கு உதவிய எனது நண்பர்கள் பலர் இன்று திசைகாட்டியில் இல்லை.

 

"எனவே நமது அதிகபட்ச ஆற்றலுடன் இதை வெற்றிக்கு இட்டுச் செல்ல முடியும்." என்றார்.

இதற்கிடையில், சர்வஜன அதிகாரத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர இன்று (08) காலை அனுராதபுரம் புனித தலத்திற்கு சென்றிருந்தார்.

 

ருவன்வெளி மகாசேயவில் வழிபாடுகளை செய்த அவர், அங்கு கூடியிருந்த பக்தர்களுடன் சுமூகமான உரையாடலில் ஈடுபட்டார்.

 

பின்னர், ருவன்வெளி மகாசேய மடத்தின் பீடாதிபதி வணக்கத்திற்குரிய ஈத்தலேவடுனுவேவே ஞானதிலக தேரரிடம் அவர் ஆசி பெற்றார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05