செய்திகள்
அவுஸ்திரேலிய அணிக்கு இலகுவான வெற்றி இலக்கு

Feb 9, 2025 - 10:32 AM -

0

அவுஸ்திரேலிய அணிக்கு இலகுவான வெற்றி இலக்கு

சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

 

போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சற்றுமுன்னர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 231 ஓட்டங்களை பெற்றுள்ளது.

 

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Angelo Mathews அதிகபட்சமாக 76 ஓட்டங்களையும், Kusal Mendis 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

 

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் Matthew Kuhnemann மற்றும் Nathan Lyon ஆகியோர் தலா 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

 

முன்னதாக இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 257 ஓட்டங்களையும் அவுஸ்திரேலிய அணி 414 ஓட்டங்களையும் பெற்றிருந்தன.

 

இதன்படி அவுஸ்திரேலிய அணிக்கு 75 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05