விளையாட்டு
கில்கிறிஸ்ட் சாதனையை முறியடித்த அலெக்ஸ் கேரி

Feb 9, 2025 - 12:28 PM -

0

கில்கிறிஸ்ட் சாதனையை முறியடித்த அலெக்ஸ் கேரி

அவுஸ்திரேலியா - இலங்கை இடையேயான 2 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி காலியில் நடைபெற்றது. இலங்கை முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 257 ஓட்டங்களில் ஆல்-அவுட் ஆனது. அவுஸ்திரேலிய முதல் இன்னிங்சில் 414 ஓட்டங்களை குவித்தது.

 

அணி தலைவர் ஸ்டீவ் சுமித், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தனர். ஸ்டீவ் சுமித் 131 ஓட்டங்களையும் (10 பவுண்டரி, 1 சிக்சர்), அலெக்ஸ் கேரி 156 ஓட்டங்களையும் (15 பவுண்டரி, 2 சிக்சர்)) எடுத்தனர்.

 

156 ஓட்டங்களை குவித்ததன் மூலம் ஆசியாவில் டெஸ்ட் போட்டி ஒன்றில் அதிக ஓட்டங்கள் எடுத்த அவுஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை அலெக்ஸ்கேரி முறியடித்துள்ளார்.

 

இதற்கு முன்பு இலங்கை, பங்காளதேஷிற்கு எதிராக கில்கிறிஸ்ட் 144 ஓட்டங்கள் எடுத்திருந்ததே அவுஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஒருவரால் டெஸ்ட் போட்டி ஒன்றில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தது. அந்த சாதனையை தற்போது அலெக்ஸ் கேரி முறியடித்துள்ளார்.

 

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிராக காலியில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிட்டதக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05