Feb 9, 2025 - 04:59 PM -
0
இலங்கை - அவுஸ்திரேலியா இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் 2 ஆவது டெஸ்ட் போட்டி காலியில் நடைபெற்றுது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 257 ஓட்டங்களை பெற்றது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலியா 414 ஓட்டங்களை குவித்து ஆல் அவுட்டானது. பின்னர் 157 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 231 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனையடுத்து 75 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா 1 விக்கெட் இழப்பிற்கு 75 ஓட்டங்களை அடித்து வெற்றி பெற்றது.
இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி இலங்கையை ஒயிட்வாஸ் செய்தது. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அவுஸ்திரேலியா சாதனை படைத்துள்ளது.
156 ஓட்டங்கள் குவித்து அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வித்திட்ட அலெக்ஸ் கேரி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த டெஸ்ட் தொடரின் 2 போட்டிகளிலும் சதமடித்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித் தொடர் நாயகன் விருதை வென்றார்.

