Feb 9, 2025 - 05:10 PM -
0
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் தற்போது இறுதி வடிவத்தை எப்படி இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிகள் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிப்போட்டிக்கு செல்லும்.
இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் தொடரில் மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தோல்வி அடைந்ததன் மூலம் இந்திய அணி பைனலுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இந்த சூழலில் புள்ளி பட்டியலில் எந்த இடத்தை பிடித்திருக்கிறது என்று தற்போது பார்க்கலாம்.
தென்னாப்பிரிக்கா அணி 12 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி 3 தோல்வி ஒரு டிரா என 69.4 வெற்றி சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. அவுஸ்திரேலிய அணி 19 போட்டிகளில் விளையாடி 13 வெற்றி நான்கு தோல்வி இரண்டு 67.54 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் நிறைவு செய்திருக்கிறது.
இந்திய அணி 19 போட்டிகளில் விளையாடி 9 வெற்றி 8 தோல்வி இரண்டு டிரா என 50 வெற்றி சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் நிறைவு செய்து இருக்கிறது.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவை விட அதிக போட்டிகள் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இரண்டாவது இடத்தை பிடித்துள்ள அவுஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் வெறும் 17 வெற்றி சதவீதம் தான் வித்தியாசமாக இருக்கிறது.
நியூசிலாந்து 48.21 வெற்றி சதவீதத்துடன் 4 ஆவது இடத்திலும் இங்கிலாந்து அணி 43.18 வெற்றி சதவீதத்துடன் 5 ஆவது இடத்திலும், இலங்கை அணி 38.46 வெற்றி சதவீதத்துடன் 6 ஆவது இடத்திலும் உள்ளது.
பங்களாதேஷ் அணி 31.25 சதவீதத்துடனும் 7 ஆவது இடத்திலும், 28.21 வெற்றி சதவீதத்துடன் மேற்கிந்திய தீவுகள் அணி எட்டாவது இடத்தில் இருக்கிறது. 27.98 வெற்றி சதவீதத்துடன் பாகிஸ்தான் அணி ஒன்பதாவது மற்றும் கடைசி இடத்திலும் இருக்கிறது. இதில் தென்னாபிரிக்காவை விட இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அதிக வெற்றியை பெற்றும் இறுதிப்போட்டிக்கு செல்ல முடியாதது சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் இந்த முறையை மாற்ற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

