Feb 10, 2025 - 12:05 AM -
0
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதிலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 304 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக ஜோ ரூட் 69 ஓட்டங்களையும் பென் டக்கெட் 65 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்திய அணியின் பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து 305 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 44.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இந்திய அணியின் சார்பில் அணித்தலைவர் ரோஹித் சர்மா 119 ஓட்டங்களையும் சுப்மன் கில் 60 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்த வெற்றியின் ஊடாக 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதோடு, 1 போட்டி மீதமிருக்கும் நிலையில் தொடரையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

