Feb 10, 2025 - 10:06 AM -
0
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை 300க்கும் அதிகளவான ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவிய அணி என்ற மோசமான சாதனையில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியாவுடன் நேற்று இடம்பெற்ற ஒருநாள் போட்டியிலேயே இங்கிலாந்து இந்த மோசமான சாதனையை படைத்துள்ளது.
இங்கிலாந்து அணி இந்த போட்டியுடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி 300க்கும் அதிகளவான ஓட்டங்களை பெற்று தோல்வியை சந்திப்பது இது 28-வது முறையாகும்.
அந்த பட்டியலில்
1. இங்கிலாந்து - 28 முறை
2. இந்தியா - 27 முறை
3. மேற்கிந்திய தீவுகள் - 23 முறை
4. இலங்கை - 19 முறை

